அருவமாக்கல்
அருவமாக்கல் (அருவச் சிந்தனை) என்பது தர்க்கவியலில், ஒரு குறிப்பிட்ட கணத்திலிருந்து சில கூறுகள் அல்லது பண்புகளை ஒருவர் மனத்தில் தனித்துப் பிரித்து, அந்தக் கணத்தின் மற்ற கூறுகளிலிருந்து அவற்றை வேறுபடுத்தும் செயல்முறை ஆகும். பண்புகள், பொருள்கள், செயல்முறைகள், நிகழ்வுகள் மற்றும் பிற தோற்றப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கணங்களுக்கு இந்தச் செயல்முறையைப் பயன்படுத்தலாம்.
தனிநபரின் உளவியல் தனித்தன்மைகளைப் பொருட்படுத்தாமல், பொதுவான உளவியல் விதிகள் அல்லது பண்புகளைத் தனித்துக் கண்டறிவது உளவியலில் அருவமாக்கலுக்கான ஓர் எடுத்துக்காட்டு ஆகும். எடுத்துக்காட்டாக, பொது உளவியல் தனிநபர் வேறுபாடுகளிலிருந்து பொதுவான உளவியல் செயல்முறைகளைத் தனித்துப் பிரிக்கிறது.
சிக்கலான தோற்றப்பாடுகளையும் செயல்முறைகளையும் எளிமைப்படுத்தி பகுப்பாய்வு செய்வதற்கும், சுற்றியுள்ள உலகை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள அருவ மாதிரிகளை உருவாக்குவதற்கும் உதவுவதால், அருவச் சிந்தனை அறிவியல்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது.