அகராதிக்குச் செல்
தொடுதல்வழி அடையாளம் காண இயலாமை
தொடுதல்வழி அடையாளம் காண இயலாமை (ஆங்கிலம்: tactile agnosia) என்பது மூளையில் தொடு உணர்வுச் சமிக்ஞைகள் தவறாகச் செயலாக்கப்படுவதால், தொடு உணர்வின் மூலம் பொருள்களையும் தமது உடல் பாகங்களையும் அடையாளம் கண்டு அவை என்னவென்று அறிந்துகொள்வதில் ஒருவர் சிரமத்தை எதிர்கொள்ளும் ஒரு நரம்பியல் உளவியல் கோளாறு ஆகும். இந்நிலை பொதுவாக மூளையின் கீழ்ப்புறச் சுவர்மடல் பாதிப்புடன் தொடர்புடையது; மேலும், சுற்றுப்புறத்தையும் தமது உடலையும் உணர்வதில் குறிப்பிடத்தக்க குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும்.