அலட்டீன்
அலட்டீன் (Alateen) என்பது, பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவர் அல்லது இருவரின் மதுச் சார்புநிலைப் பிரச்சினையால் வாழ்க்கை பாதிக்கப்பட்ட 13 முதல் 19 வயதுடைய பதின்பருவத்தினருக்கான தன்னார்வ, முறைசாரா ஆதரவுக் குழுவாகும்.
இளைஞர்கள் தங்கள் உணர்வுகள், அனுபவங்கள் மற்றும் கவலைகளைப் பகிர்ந்துகொள்ளவும், இதே போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களிடமிருந்து ஆதரவைப் பெறவும் பாதுகாப்பான ஓர் இடத்தை வழங்குவதே அலட்டீனின் முதன்மை நோக்கமாகும்.
அலட்டீன் வழக்கமான கூட்டங்களை நடத்துகிறது. அவற்றில் பதின்பருவத்தினர் தங்கள் உணர்வுகளைப் பற்றிப் பேசலாம், அனுபவக் கதைகளைப் பகிர்ந்துகொள்ளலாம், தங்கள் குடும்பங்களில் உள்ள மதுச் சார்புநிலையைச் சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டறியலாம். அலட்டீன் குழுக்கள் பெரும்பாலும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (AA) மற்றும் அல்-அனான் (மதுச் சார்புநிலை உள்ளவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கானது) குழுக்கள் பின்பற்றும் அதே பெயர் மறைவு மற்றும் இரகசியத்தன்மைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.