குதப் பருவம்
குதப் பருவம் (Anal stage) என்பது சிக்மண்ட் ஃபிராய்டின் கோட்பாட்டில் உளப்பாலியல் வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சமாகும். குதப் பருவம் பொதுவாகச் சுமார் 2 முதல் 3 வயது வரை நிகழ்கிறது. இது மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்தும் திறனின் வளர்ச்சியுடன் தொடர்புடையது.
குதப் பருவத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
-
குதவாயில் கவனம்: இந்த வயதில் குழந்தைகள் குதவாயின் தூண்டுதலால் இன்பத்தை உணரத் தொடங்குகின்றனர். எடுத்துக்காட்டாக, மலம் கழிப்பதிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டுவதன் மூலம் இது வெளிப்படலாம்.
-
கற்றல் செயல்முறை: மலம் மற்றும் சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட உடலியல் தேவைகளைக் கட்டுப்படுத்தப் பெற்றோர் குழந்தைக்குக் கற்பிக்கத் தொடங்குகின்றனர். இது சமூக நெறிமுறைகளையும் எதிர்பார்ப்புகளையும் பற்றிய புரிதல் குழந்தையிடம் உருவாவதுடன் தொடர்புடையது.
-
முரண்பாடுகளும் நெறிமுறைகளும்: குழந்தையின் இன்பம் நாடும் விருப்பத்திற்கும், சமூக நெறிமுறைகள் மற்றும் பெற்றோர், சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே முரண்பாடுகள் உருவாகின்றன. இந்த முரண்பாடுகள் தீர்க்கப்படும் விதம் எதிர்கால ஆளுமை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
குதப் பருவத்தில் ஏற்படும் அனுபவங்கள் ஒருவரின் ஆளுமையில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எஸ். ஃபிராய்ட் நம்பினார். குறிப்பாக, ஒழுங்கு, சிக்கனம், பிடிவாதம் ஆகியவற்றுடன் தொடர்புடைய குணநலன்கள் உருவாவதில் அவை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அவர் கருதினார்.