ஒப்புமை (ஆங்கிலம்: analogy) என்பது பொருள்கள் அல்லது நிகழ்வுகளுக்கு இடையிலான ஒற்றுமையின் அடிப்படையில், அவற்றுக்கு இடையிலான உறவுகளை மற்றொரு பொருள் அல்லது நிகழ்வு இணைக்கு மாற்றிப் பயன்படுத்தும் ஒரு சிந்தனைச் செயல்முறை ஆகும். ஏற்கெனவே அறியப்பட்ட கருத்துகளுக்கும் புதிய கருத்துகளுக்கும் இடையே தொடர்புகளை நிறுவுவதன் மூலம், புதிய தகவல்களைப் புரிந்துகொள்ளவும் சிக்கல்களைத் தீர்க்கவும் இந்தச் செயல்முறை உதவுகிறது.