வினாப்பட்டியல் வழிக் கணக்கெடுப்பு
வினாப்பட்டியல் வழிக் கணக்கெடுப்பு (ஆங்கிலத்தில் survey) என்பது பதிலளிப்பவர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்குக் கட்டமைக்கப்பட்ட வினாப்பட்டியல்களைப் பயன்படுத்தும் தரவு சேகரிப்பு முறையாகும்.
வினாப்பட்டியல் வழிக் கணக்கெடுப்பை நேருக்கு நேர் நேர்காணல்கள், தொலைபேசி நேர்காணல்கள், ஆன்லைன் கணக்கெடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நடத்தலாம். எனினும், இந்த முறையில் பதில்களில் திரிபுகள் ஏற்படுவதைத் தவிர்க்கக் கேள்விகளைச் சரியாக வடிவமைப்பதும், பதிலளிப்பவர்களின் அடையாளம் வெளிப்படாமல் இருப்பதையும் தரவு சேகரிப்பு செயல்முறையின் நம்பகத்தன்மையையும் உறுதிசெய்வதும் முக்கியம்.
அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களிடமிருந்து தரவுகளைச் சேகரிக்க முடிவதும், செயல்முறையை ஒரே சீராக அமைக்க முடிவதும் இந்த முறையின் நன்மைகளாகும். இருப்பினும், விரிவான பதில்களைப் பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதும், தரவு சேகரிப்பு செயல்முறையின் மீதான கட்டுப்பாடு குறைவாக இருப்பதும் இதன் குறைபாடுகளாகும்.