காரணப் பண்பித்தல்
காரணப் பண்பித்தல் (ஆங்கிலம்: causal attribution) என்பது ஒரு நடத்தை, நிகழ்வு அல்லது சூழ்நிலைக்கான காரணங்கள் அல்லது காரணக் காரணிகளை அடையாளம் கண்டு பகுப்பாய்வு செய்வதன் அடிப்படையில், அதனை விளக்கும் அல்லது அதற்குக் காரணம் கற்பிக்கும் செயல்முறை ஆகும். அதாவது, காரணப் பண்பித்தலின்போது குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு எந்தக் காரணிகள் அல்லது நிகழ்ச்சிகள் காரணமாக அமைந்தன என்பதைத் தீர்மானிக்க நாம் முயல்கிறோம்.
காரணப் பண்பித்தலுக்கான எடுத்துக்காட்டுகள்:
-
உள்சார்ந்த காரணங்கள்: ஆளுமைப் பண்புகள், உந்துதல் அல்லது திறன்கள் போன்ற உள்சார்ந்த காரணிகளின் விளைவாக ஒரு நடத்தை அல்லது நிகழ்வை மக்கள் விளக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒருவருக்குப் பதவி உயர்வு கிடைத்தால், அதற்கு அவரது கடின உழைப்பும் தொழில்முறைத்தன்மையும் காரணம் எனக் கருதப்படலாம்.
-
வெளிசார்ந்த காரணங்கள்: சூழ்நிலைகள், தற்செயல் அல்லது சுற்றுச்சூழலின் தாக்கம் போன்ற வெளிசார்ந்த காரணிகளே ஒரு நடத்தைக்கு அல்லது நிகழ்வுக்குக் காரணம் என மக்கள் கருதலாம். எடுத்துக்காட்டாக, போக்குவரத்து நெரிசலால் ஒருவர் வேலைக்குத் தாமதமாக வந்தால், அது வெளிசார்ந்த காரணத்தால் நிகழ்ந்ததாக விளக்கப்படலாம்.
-
கலப்புக் காரணங்கள்: காரணப் பண்பித்தல் பெரும்பாலும் உள்சார்ந்த மற்றும் வெளிசார்ந்த காரணிகள் இரண்டையும் உள்ளடக்குகிறது. எடுத்துக்காட்டாக, ஒருவர் தேர்வில் தோல்வியடைந்ததைப் போதிய தயாரிப்பின்மை (உள்சார்ந்த காரணம்) மற்றும் கடினமான கேள்விகளால் ஏற்பட்ட பதற்றம் (வெளிசார்ந்த காரணம்) ஆகியவற்றின் விளைவாக விளக்கலாம்.