பிளஃப் (ஆங்கிலம்: Bluff) என்பது மற்றவர்களைத் தவறாக நம்ப வைக்கும் நோக்கில், ஒருவர் உண்மையில் இருப்பதைவிடத் தம்மை வலிமையானவராகவும், அதிகத் தன்னம்பிக்கை கொண்டவராகவும் அல்லது அதிக வளங்களைக் கொண்டவராகவும் காட்டிக்கொள்ளும் ஓர் உத்தி அல்லது அணுகுமுறை ஆகும். தமது உண்மையான நோக்கங்களையோ பலவீனங்களையோ வெளிப்படுத்தாமல் விரும்பிய முடிவை அடைவதற்கான வழியாக, விளையாட்டுகள், பேச்சுவார்த்தைகள் அல்லது சமூகத் தொடர்புகளில் பிளஃப் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

வாய்மொழிக் கூற்றுகள், உடல்மொழி, உணர்ச்சிசார் எதிர்வினைகள் மற்றும் பிற சொற்சாராத தொடர்பு முறைகள் போன்ற பல்வேறு வழிமுறைகள் பிளஃப்பில் இடம்பெறலாம். உண்மையில் தம்மிடம் இல்லாத குறிப்பிட்ட பண்புகள், அறிவு அல்லது திறன்கள் இருப்பதாக மற்றவர்களை நம்ப வைப்பதே பிளஃப்பின் நோக்கம் ஆகும்.

போக்கர் போன்ற விளையாட்டுகளில், ஒருவர் தம்மிடம் உள்ள சீட்டுகள் வலிமையானவை என்று எதிராளிகளை நம்ப வைக்கும் வழியாகப் பிளஃப் பயன்படுத்தப்படுகிறது; இதனால் பலவீனமான சீட்டுகள் இருந்தாலும் வெற்றி பெற முடியும். வணிகப் பேச்சுவார்த்தைகளில், உண்மையில் இருப்பதைவிடச் சாதகமான நிலையில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, ஒப்பந்தத்தில் மேலும் சாதகமான நிபந்தனைகளைப் பெறுவதற்காகப் பிளஃப் பயன்படுத்தப்படலாம்.