நிறப் புலனுணர்வு
நிறப் புலனுணர்வு (color perception) என்பது சுற்றியுள்ள உலகின் நிறங்களை ஓர் உயிரினம் உணர்ந்து பொருள்கொள்ளும் திறன் ஆகும். இது ஒளியின் இயற்பியல் பண்புகள், கண்ணின் உடற்கூறியல் மற்றும் செயல்பாடு, மூளையில் தகவல் செயலாக்கப்படுதல் உள்ளிட்ட பல காரணிகளைச் சார்ந்த ஒரு சிக்கலான செயல்முறை ஆகும்.
நிறப் புலனுணர்வு என்பது கண்ணுக்குள் நுழையும் ஒளியின் நிறமாலை அமைப்பு மற்றும் செறிவு ஆகியவற்றுடன் மட்டும் வரையறுக்கப்படுவதில்லை. இது சூழமைவு மற்றும் சுற்றுச்சூழலையும் சார்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஒளியமைப்பு, பின்னணி மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து ஒரே பொருளின் நிறம் வெவ்வேறாக உணரப்படலாம்.
நிறப் பார்வை அனுபவம் மற்றும் உளவியல் பண்புகள் போன்ற நமது தனிப்பட்ட இயல்புகளையும் நிறப் புலனுணர்வு சார்ந்திருக்கலாம்.
இந்த நிகழ்வு பார்வை உடலியங்கியல், புலனுணர்வு உளவியல் மற்றும் நிற அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், நிறம் முக்கியப் பங்கு வகிக்கும் வடிவமைப்பு, கலை மற்றும் பல துறைகளில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.