அகராதிக்குச் செல்

இணக்கப்போக்கு

இணக்கப்போக்கு என்பது மற்ற நபர்கள் அல்லது சமூகக் குழுக்களின் அழுத்தம் அல்லது செல்வாக்கிற்கு ஏற்ப, ஒருவரின் சொந்த நம்பிக்கைகள் அல்லது விருப்பங்களைப் பொருட்படுத்தாமல், சமூகப் பண்பாட்டு நெறிகள், எதிர்பார்ப்புகள் அல்லது தரநிலைகளுடன் ஒத்துப்போகும் நோக்கில் அவரது கருத்து, நம்பிக்கைகள் அல்லது நடத்தையில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும் ஒரு சமூக-உளவியல் செயல்முறை ஆகும். இச்செயல்முறையில் பெரும்பான்மையினரின் கருத்துடன் உடன்படுவதைப் பொதுவெளியில் வெளிப்படுத்துதல் (மேலோட்டமான இணக்கப்போக்கு), புதிய நம்பிக்கைகள் அல்லது நடத்தை முறைகளை மனதளவில் ஏற்றுக்கொள்ளுதல் (ஆழமான இணக்கப்போக்கு) ஆகிய இரண்டும் அடங்கலாம். மேலும், சமூக அழுத்தம், செல்வாக்கின் மூலமாக இருப்பவரின் சமூக நிலை மற்றும் அதிகாரம், தனிநபரின் தன்னம்பிக்கை மற்றும் சுய அடையாளத்தின் அளவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை இது சார்ந்திருக்கலாம். சமூக இயக்கவியலையும், சமூகச் சூழல் மக்களின் நடத்தை மற்றும் நம்பிக்கைகளில் தாக்கம் செலுத்தும் வழிமுறைகளையும் புரிந்துகொள்வதற்கு இணக்கப்போக்கைப் பற்றிய ஆய்வு முக்கியமானதாகும்.