அகப் பேச்சு
அகப் பேச்சு (ஆங்கிலம்: implicit speech, inner speech, covert speech) என்பது ஒருவர் மனத்தில் தம்முடன் பேசிக்கொள்ளும்போது நிகழும் அக உரையாடல் அல்லது தனியுரை ஆகும். இது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களை உரக்கச் சொல்லாமல், அவற்றைப் பற்றிச் சிந்தித்து, பகுப்பாய்வு செய்து, தெளிவாக உருவாக்கும் சுயபரிசீலனையின் ஒரு வடிவமாகும்.
அகப் பேச்சின் முக்கியப் பண்புகள்:
-
அக உரையாடல்: ஒருவர் தம்முடன் உரையாடி, தமக்கே கேள்விகளைக் கேட்டு அவற்றுக்குப் பதிலளித்து, சிக்கல்களைப் பகுப்பாய்வு செய்து முடிவுகளை எடுக்கும்போது, அகப் பேச்சு ஓர் அக உரையாடலாக அமையலாம்.
-
எண்ணங்களைத் தெளிவாக உருவாக்குதல்: ஒருவர் தமது எண்ணங்களைத் தெளிவாகவும் துல்லியமாகவும் உருவாக்க அகப் பேச்சு உதவுகிறது. தகவல்களை ஒழுங்கமைக்கவும், வாதங்களைப் பகுப்பாய்வு செய்யவும், கருத்துகளை வெளிப்படுத்தவும் இது உதவுகிறது.
-
சுய ஒழுங்குபடுத்தல்: நடத்தை மற்றும் உணர்ச்சிகளைச் சுயமாக ஒழுங்குபடுத்த அகப் பேச்சைப் பயன்படுத்தலாம். அமைதியடையவும், தம்மை ஊக்குவிக்கவும் அல்லது முடிவுகளை எடுக்கவும் ஒருவர் தமக்குள் பேசிக்கொள்ளலாம்.
-
சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல்: அகப் பேச்சின் மூலம் ஒருவர் பல்வேறு மாற்று வழிகளைப் பரிசீலித்து, தமது செயல்களின் விளைவுகளைப் பகுப்பாய்வு செய்யலாம்; இது முடிவெடுப்பதற்கு உதவுகிறது.
-
பரிசீலனையும் சுயபுரிதலும்: ஒருவர் தமது உணர்வுகள், அனுபவங்கள் மற்றும் சுயபுரிதலின் அளவை உணர அகப் பேச்சு உதவுகிறது. தமது அக நிலைகளைக் கவனித்து அவற்றைப் பகுப்பாய்வு செய்யவும் இது உதவுகிறது.