அகராதிக்குச் செல்
குறுகிய கால நினைவாற்றல்
குறுகிய கால நினைவாற்றல் என்பது தற்போது பயன்படுத்தக்கூடிய குறைந்த அளவிலான தகவல்களைத் தற்காலிகமாகச் சேமிக்க உதவும் நினைவாற்றல் அமைப்பாகும். இந்த நினைவாற்றல் அமைப்பு, புலனுணர்வுகள் மற்றும் நீண்ட கால நினைவாற்றலிலிருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி, அவற்றை ஒரு குறுகிய காலத்திற்கு, பொதுவாக 20 விநாடிகள் வரை, செயலில் வைத்திருக்கிறது. இதன் கொள்ளளவு 4-5 கூறுகள் எனக் கருதப்படுகிறது; இது உடனடிப் பணிகளைச் செய்வதற்காக இந்தத் தகவல்களைக் கையாள நனவுநிலைக்கு உதவுகிறது.