அகராதிக்குச் செல்
பார்வைவழி அடையாளம் காண இயலாமை
பார்வைவழி அடையாளம் காண இயலாமை (Visual agnosia) என்பது பார்வையில் பிரச்சினைகள் இல்லாதபோதும், பொருட்களைப் பார்த்து அடையாளம் காண முடியாத அறிவாற்றல் குறைபாடு ஆகும். மூளையில் ஏற்படும் சேதங்களால் இந்த நிலை உருவாகலாம். இது பொதுவாக மூளையின் இடது பிடரி மடலுடன் அல்லது பொட்டு மடல்களுடன் தொடர்புடையது. பார்வைவழி அடையாளம் காண இயலாமை இரு வகைப்படும்: புலனுணர்வு சார்ந்த வகையில் (apperceptive), முழுமையான காட்சிப் படிமம் உருவாவதில்லை; நபரால் வடிவங்களைப் பார்த்து வரையவோ பொருத்திப் பார்க்கவோ முடியாது. தொடர்புபடுத்துதல் சார்ந்த வகையில் (associative), காட்சிப் படிமம் உருவாகிறது, ஆனால் பொருளைப் பற்றிய அறிவுடன் அது இணைக்கப்படுவதில்லை; நபரால் பொருளைப் பார்த்து வரைய முடியும், ஆனால் அதை அடையாளம் காண முடியாது.